ட்டாவா

டுவழியில் தொழில்நுட்பக் கோளாறால் நின்ர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயீல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டு வருகிறது.  தினமும் காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது.

நேற்றி இந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எட்டாவா அருகே நின்று விட்டது. ரயில்வேயின் தொழில்நுட்பக் குழுவினர் விரைந்து வந்து கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை என்பதால் வந்தே பாரத் ரெயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

அப்பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  எனவே சரக்கு ரயிலின் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரயில் பர்தானா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.