கொல்கத்தா
சமிபத்தில் கைதான கொல்கத்தா அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3 ஆம் மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதவல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆயினும்அவரி சிலமணிநேரங்களில் மற்றொரு மருத்துவமனைக்கு முதல்வராக மாநில அரசு நியமித்தது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தீப் கோஷை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்குபதில் அவரை நீண்ட நாளில் விடுமுறையில் இருக்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்ர அறிவுறுத்திய நிலையில் சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் இடைநீக்கம் செய்தது.
சிபிஅ பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீ கோஷ் உள்பட பலரிடம் விசாரணை செய்து வருகிறது. விசாரணையில்சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாக்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதையொட்டி சந்தீப் கோஷின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நேற்று சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
சந்தீப் கோஷை அலிபூர் நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியபோது, மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. 10 நாட்கள் விசாரணைக் காவல் கோரியிருந்தது. இந்த வழக்கில், கைதான சந்தீப் கோஷ் ம்ற்றும் கூடுதல் செயலாளர் உள்பட மேலும் மூன்/று பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.