டெல்லி

த்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவ செயலாளராக உள்ள ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (ICC) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக கடந்த இரண்டு முறை ஐ.சி.சி. தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், மூன்றாவது முறையாக தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா (35) மிகக் குறைந்த வயதிலேயே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியின்றி புதிய தலைவராக தேர்வாகி உள்ளார். வரும் 5 ஆம் தேதி ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்க உள்ள ஜெய்ஷா. மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐ.சி..சி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா.

பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். நட்சத்திர வீரர் விராட் கோலியின் வாழ்த்து பதிவினை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

விராட் கோலியின் பதிவுக்கு நடிகர் பிரகசஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,

“ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, பேட்ஸ்மேன்… பவுலர்… விக்கெட் கீப்பர்… பீல்டர்… மற்றும் ஆல்ரவுண்ட்… இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெஜண்டிற்கு அனைவரும் கைத்தட்டல் அளிப்போம்”

என்று பதிவிட்டுள்ளார்.