நடிகர் அஜித் 234 கி.மீ. வேகத்தில் கார் ஒட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் வெளியாக தயாராகி வருகிறது.
ஷூட்டிங் முடிந்ததை அடுத்து அஜித் வழக்கம் போல் வெளிநாட்டிற்கு சென்று கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆடி கார் ஒன்றில் 234 கி.மீ. வேகத்தில் செல்லும் அஜித்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
துணிவு திரைப்படம் கடந்த 2023 பொங்கலுக்கு ரிலீசான நிலையின் அவரது அடுத்த படமான விடாமுயற்சி இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விடாமுயற்சி ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் 234 கி.மீ. வேகத்தில் ஆடி காரை ஒட்டிச் செல்லும் அஜித்தின் ஸ்பீடு வீடியோ அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.