போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று போலந்து புறப்பட்டார்.
போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/MEAIndia/status/1826538849796751723
45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், இந்தியா-போலந்து இடையேயான உறவில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.