தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவின் இந்த ராஜினாமாவை குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

2020ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த நடிகை குஷ்பு 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக செயல்பட்டு வந்த குஷ்பு தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ள இந்த சூழலில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Patrikai.com official YouTube Channel