பெங்களூரு

பெங்களூரு நகரில் உள்ள பிரபல காப்பி ஷாப் பெண்கள் கழிவறையில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் பி எல் சாலை பகுதியில் தேர்ட் வேவ் என்னும் பிரபல காப்பி ஷாப் அமைந்துள்ளது இந்த காப்பி ஷாப்பில் பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல்போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அப்போது ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. அவர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து காவல்துறை விசாரணை நடத்தியது.

அந்த மொபைல் காப்பி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று தெரிய வந்துள்ளது. தேர்ட் வேவ் நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்து அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. மக்களிடையே காப்பி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.