சென்னை:  தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாயில் கலர் சேர்க்கப்படுவதற்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு தற்போது,  பானிபூரி விற்பனைக்கும்  மருத்துவச்சான்று கட்டாயம் என  உத்தரவிட்டு உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி பானிபூரி கடைகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாயத்து வருகின்றனர். தமிழக மக்களின் உயிருக்கு  உலை வைக்கும் டாஸ்மாக் சாராயத்தை அரசே  விற்பனை செய்து மெல்ல மெல்ல கொன்றுவருவதுடன், கள்ளச்சாராயம், போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதை விட்டு,  , அப்பாவிகள் வியாபாரம் செய்து பிழைக்கும் உணவு பண்டங்களில் வீரத்தை காட்டுகிறது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வடமாநில உணவான பானி பூரி, சமீப காலமாக தமிழக இளைஞர் சமுதாயத்தினரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த  பானிபூரியை பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே விற்பனை செய்து வருகிறது. இதற்க தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது வீதிகள் தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பானி பூரியில்,  சோதனை செய்த போது அதில் புற்றுநோய் உருவாக்கும் பச்சை நிற நிறமிகள் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையானது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து,   தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  பானிபூரி கடைகளில் ஆய்வு செய்து பானிபூரி சேர்க்கப்படும் தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பிரிந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும்,  அப்போது, பல  இடங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பானிபூரிகள் அனைத்தும் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தற்போது உணவு பாதுகாப்புத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  அதில்,  பானிபூரி கடை விற்பனையாளர்களுக்கு மருத்துவசான்று கட்டாயம் என உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ் குமார், சென்னை முழுவதும் தனி தனி மண்டல வாரியாக முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பானிபூரி விற்பனை செய்வோருக்கு என்று தனியாக சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் தொடர்பாக முறையான பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல் கட்டாயம் என்றும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் சென்னை முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னையை போல் தமிழகம் முழுவதும் இது போன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பஞ்சுமிட்டாயில் புற்றுநோக்கான நிறமி சேர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் பானிபூரிக்கும் இதே நிலையா என்று பானிபூரி பிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.