டெல்லி

நேற்றிரவு மீண்டும பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் 26 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 96 வயதான எல்.கே.அத்வானிக்கு சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர் கடந்த ஜூன் 27-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நேற்றிரவு எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 9 மணியளவில் அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.