பெங்களூரு

தெற்கு ரயில்வே மைசூரு – சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.

”பெங்களூரு கெங்கேரி-ஹெஜ்ஜலா இடையேயும், கே.எஸ்.ஆர். பெங்களூரு-பெங்களூரு கன்டோண்மென்ட் இடைேயயும் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் சில ரயில்கள் சேவை முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளது. அந்த விவரம் பின் வருமாறு.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு ‘காவேரி’ எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16021) அடுத்த மாதம் (ஜூலை) 1, 2, 8, 9 ஆகிய 4 நாட்கள் முழுமையாாக ரத்து செய்யப்படுகிறது.

* மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் ‘காவேரி’ எக்ஸ்பிரஸ் ரயில் (16021) அடுத்த மாதம் 2, 3, 9, 10 ஆகிய 4 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

* சாம்ராஜ்நகர்-திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (16219) அடுத்த மாதம் 1 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-திருப்பதி-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16203/04), திருப்பதி-சாம்ராஜ்நகர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (16220), அரிசிகெரே-மைசூரு பயணிகள் சிறப்பு ரயில் (06267), மைசூரு-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-மைசூரு பயணிகள் சிறப்பு ரயில் (06269/70), மைசூரு-கே.எஸ்.ஆர். பெங்களூரு ’மெமு (06560), கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் அதிவிரைவு ரயில் (12658) ஆகியவை ஜூலை 2 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

* மைசூரு-அரிசிகெரே பயணிகள் சிறப்பு ரயில் (06268), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு மெமு (06559), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னப்பட்டணா மெமு (01763), டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரயில் (12657) ஆகியவை அடுத்த மாதம் 3 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரயில் (12657) வருகிற 2 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது ஒயிட்பீல்டு வரை மட்டுமே இயங்கும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.