சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கா.ராமச்சந்திரன் ’மருத்துவச் சுற்றுலா மாநாடு’ புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1.அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவாலயப்பகுதி, சிவகங்கை மாவட்ட பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம் தேவாலயப்பகுதி, தூத்துக்குடி மாவட்டம் கழுமலை ஆகிய வழிபாட்டு சுற்றுலாத்தலங்களில் அடிப்படை வசதிகள் ரூ.8.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
2.தமிழ்நாட்டில் கிராமிய சுற்றுலா மற்றும் வன்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
3. கடற்கரை பகுதிகளில் ரூ.6.50 கோடியில் வளச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. அவதானப்பட்டி ஏரி, புங்கனூர் ஏரி, தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பணிகள் ரூ.5.70 கோடியில் மேற்கொள்ளப்படும்.
5. கிராமியச் சுற்றுலா மையங்கள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
6. கோயம்புத்தூரில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சுற்றுலா மாநாடு ரூ.1 கோடியில் நடத்தப்படும்.
7.நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடி செலவிடப்படும்.
8.புதுப்பட்டினம் கடற்கரை, பழவேற்காடு ஏரிப்பகுதிகளில் சுற்றுலாப் பெருந்திட்டம் ரூ.1 கோடியில் தயாரிக்கப்படும்.
9. கிராமிய சுற்றுலா, வான்நோக்கு சுற்றுலா ஆகியவை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
10, ரூ.10.20 கோடியில் சுற்றுலாத் தலங்களுக்கான அருவிகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.