டெல்லி

ர்த்ருஹரி மஹ்தாப் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த  9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மோடியுடன் 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்  இந்நிலையில் மக்களவைக் கூட்டம் வரும் 24ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் ஜுன் 26 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்-ஐ நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.  இவர் ஒடிசா மாநில பாஜக எம்.பி-யாவார்.  பத்ருஹரி புதிய எம்.பி-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது.