கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராய சாவு ஏதும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தகவல்கள் வந்தன. இங்கு இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பிரவீன், சுரேஷ், சேகர், ஜெகதீஷ் ஆகிய 4 பேர் உயிரிழந்து 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்துதாக கூறப்பட்டதால் இதுகுறித்து காவல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஒரு செய்தி ஊடகத்திடம்,
“கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு இறந்துள்ளனர்.. இதுபற்றி செய்தியாளர்களிடம் விரைவில் விளக்கம் அளிக்க உள்ளோம்”
என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “
”கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளம் மற்றும் செய்தி தொலைகாட்சிகளில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையில் உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இதுபோன்ற செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். ”
எனக் கூறப்பட்டுள்ளது.