விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா ம க போட்டியிட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததால் நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது  ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இன்று இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி  வேட்புமனு தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!

என்று தெரிவித்துள்ளார்