பெங்களூரு

றைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை பெங்களூரு பாட்டரி டவு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக கோரிக்கைகள் எழுந்துள்ள்ன.

விரைவில் பெங்களூருவில் கொட்டிகெரே-நாகவாரா இடையே மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பாட்டரி டவுன் மெட்ரோ நிலையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க கோரிக்கைகள் எழுந்தன

பிரதமர் அலுவலகம், முதல்வர் சித்தராமையா, மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இது குறித்து கடிதம் எழுதப்பட்டது  எனவே. இது குறித்து பிரதமர் மற்றும் முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் மெட்ரோ நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மெட்ரோ நிர்வாகம் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக கொட்டிகெரே-நாகவாரா இடையே உள்ள பாட்டரி டவுன் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புனித் ராஜ்குமாரின் பெயரை வைக்க பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.