டெல்லி

க்களவை தேர்தல் வெற்றியை கொண்டாட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.

இன்று மக்களவைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தேர்தல்க்கு கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என அறிவித்தாலும்,  ஏற்கனவே கடந்த 2004 ஆம் வருடம் கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக தேர்தல் முடிவுஅல் வந்த்ளதால் காங்கிரஸ் கட்சி இந்த கருத்துக் கணிப்புகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறி வருகிறது.

இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் நேற்று முதலே காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சி அமைப்போம் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உறுதியாக கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.