பெங்களுரு
பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
சிபிஐ வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை மே 27ம் தேதி வெளியிட்டிருந்தார். அவர் அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா மே 30ம் தேதி நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அவரை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய கார்நாடக காவல்துறையினர் திட்டமிடப்பட்டிருந்ததது.
பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.