புனே நகரில் கடந்த சனிக்கிழமை இரவு அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் பைக்கில் சென்று கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கார் ஓட்டிவந்ததாக கைது செய்யப்பட்ட 17 வயது வாலிபர் புனே நகரின் பிரபல கட்டுமான நிறுவன முதலாளியின் மகன் என்பது தெரியவந்தது.

கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் 15 மணி நேரத்தில் ஜாமீன் பெற்று வீடு திரும்பிய நிலையில் தொழிலதிபரான அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்கள் முன் அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார் ஒன்றில் மகிழ்ச்சியாக மது அருந்திக்கொண்டிருந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் புனே போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பார் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் 17 வயது மைனருக்கு மது விற்றது தொடர்பாக பார் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்…