ரேபரேலி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

இந்தியாவின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திற்க்கான 5-வது கட்ட தேர்தல் ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, சாலை வழியாக ரேபரேலிக்கு சென்றார். அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். பிறகு ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட பல வாக்குச் சாவடிகளையும் சென்று ராகுல் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

இனேஉ ராகுல்காந்தி ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றபோது செல்பி எடுப்பதற்காக அவரை சுற்றி பலர் திரண்டனதால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இத் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் தேர்தல் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள்து.