தராபாத்

பி எல் தொடரில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வருமாறு

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

இன்றைய இரண்டு லீக் ஆட்டங்களில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

அடுத்ததாக கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.