அருள்மிகு ஸ்ரீ வேத நாராயணஸ்வாமி கோயில், நாகலாபுரம், சித்தூர் ,ஆந்திரா.
இறைவன் : வேதநாராயண பெருமாள்.
தாயார் : வேதவல்லி தாயார்.
ஊர் : நாகலாபுரம்
மாவட்டம் : சித்தூர் ,ஆந்திரா.
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 ,பகல் 01:00 -8 .00
பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இத்தலத்தில் இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலமாகும் .அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறார் .இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .
செல்லும் வழி:
இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது .சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது