பெங்களூரு

ர்நாடக முன்னாள் அமைச்சர் எச் டி ரேவண்ணா இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிரார்.

மஜத கட்சியில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் எச்.டி.ரேவண்ணா முன்னாள் அமைச்சர் ஆவார்  இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா (33) ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆவார். பிரிஜ்வல் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 4 ஆம் தேதி பெண்ணை கடத்தியதாக பெங்களூருவில் வைத்து எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு கடந்த 8-ந்தேதி எச்.டி.ரேவண்ணா பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பெண் கடத்தப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற்த்தில் எச்.டி. ரேவண்ணா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று அந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது பெண் கடத்தப்பட்ட வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சந்தோஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஜாமீன் கிடைத்தாலும், ஜாமீன் மனு ஆவணங்கள் சிறைத்துறையிடம் மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என்றாலும் ஜாமீன் இரவு 7 மணிக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே எச்.டி.ரேவண்ணா நேற்றே சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஜாமீன் உத்தரவு நகலை வழக்கறிஞர்கள் இன்று  பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் வழங்குவார்கள் என்றும், அதன் பிறகே இ்ன்று மதியத்திற்குள் சிறையில் இருந்து எச்.டி.ரேவண்ணா விடுதலை ஆவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.