டெல்லி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸின் உத்தரவாதம் பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று 96 தொகுதிகளுக்கான 4 அம்ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சோனியா காந்தி அந்த வீடியோவில்,

“சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்குவது வரை பெண்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், இன்று கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். பெண்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் வந்துள்ளது.

காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறது  காங்கிரசின் “உத்தரவாதங்கள்” ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன.

காங்கிரசின் ‘உத்தரவாதம்’ பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் என்பதால் அனைவரும் இன்றைய தேர்தலில் மட்டுமின்றி அடுத்தடுத்த கட்ட தேர்தலிலும்  ’இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்பச் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.”

என்று கூறியுள்ளார்.