சென்னை
நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் கட்சி எம் பி செல்வராஜ் உடல் நலக்குறைவால் மரண அடைந்துள்ள்ர்.
நாகப்பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (66 வயது) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக செனையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார்.
ஏற்கனவே நாகை செல்வராஜ் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வராஜ் திருவாரூர் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1989 முதல் தொடர்ச்சியாக 7 முறை நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளார்.