டெல்லி

மது சொந்த நண்பர்களையே பிரதமர் மோடி தாக்க தொடங்கி உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய போது,

“தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அம்பானி-அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது ஏன்? இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி-அதானியை விமர்சித்து வந்தவர்கள் திடீரென விமர்சனத்தை நிறுத்தியதற்கு காரணம், அவர்களுக்கு கட்டுக்கட்டாக பணம் வந்து சேர்ந்ததால் தானா? இது குறித்து காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு விவரிக்க வேண்டும்”

என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில்,

“காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல! மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று பிரதமர் தனது சொந்த நண்பர்களையே தாக்க தொடங்கிவிட்டார். மோடியின் நாற்காலி நடுங்குவது தெளிவாக தெரிகிறது. தேர்தல் முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்.”

என்று பதிவிட்டுள்ளார்.