பெங்களூரு

நேற்று பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுடிகளில் இடி மினலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

Hailstorm on the road in a summer day

கடந்த ஆண்டு கர்நாடகாவில்தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அம்மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.  அங்குள்ள ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதுடன் ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.  இந்த சிரமத்தை  போக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நல்ல மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அது மட்டுமின்றி ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரில் சிவாஜி நகர், மெஜஸ்டிக், விதானசவுதா, ஆனந்தராவ் சர்க்கில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.