ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம், நியூயார்க், அமெரிக்கா..!!
*ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம் அமெரிக்காவில், 45-57, பௌனே தெரு, ப்புழுஸிங், நியூயார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ‘வட அமெரிக்கா இந்து திருத்தலத்தின் சங்கம்’ என்ற அமைப்பின் மூலம் எவ்வித லாப நோக்கமின்றி செயல்படுகின்றது. இந்த அமைப்பு 26.01.1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
*தமிழ்நாட்டில் உள்ள பன்றிமலை சுவாமிகள் 26 இயந்திரங்கள் தயார் செய்து* *இங்கு அனுப்பியதாகவும், அவ்வியந்திரங்கள் சுமார் 5 ஆண்டுகள் பூஜையில் வைக்கப்பட்டதாகவும் இந்த கோவிலின் தல வரலாறு மூலம் அறிய முடிகின்றது.
*இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மகா வல்லப கணபதியாகும்.
*மேலும் இத்தலத்தில் வெங்கடேஸ்வரர் என்ற பாலாஜி, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, நரசிம்மர், சத்யநாரயணர், ஆஞ்சநேயர், நாகேந்திர சுவாமி, சண்முகர், சிவன், பார்வதி, காமாட்சி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, துர்கை, நவகிரகம், அய்யப்பன், சொர்ண பைரவர், போன்ற அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்வதற்கு மூர்த்திகள் உள்ளன. ராகவேந்தருக்கு தனியாக மூர்த்தியும் இங்கு உள்ளது.
*இங்கு மகா கணபதி லட்சார்தனை, சத்ய நாரயண பூஜை, ஆஞ்சநேயர் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
*தேதியினை பக்தர்கள் முன்பே அறிந்து கொண்டு, முன்பதிவு செய்து கொண்டு தங்களுக்கு உகந்த தெய்வங்களின் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். மேலும் இங்குள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் அபிசேகங்கள் நடைபெறுவதுண்டு.
*சுருக்கமாகக் கூறப்போனால் தமிழ்நாட்டின் திருத்தலத்தில் உள்ள தினசரி பூஜைகள் போன்று இங்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன என்று கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் வினாயகர் சதுர்த்தி அன்று தேரோட்டம் நடைபெறுவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
*இத்திருத்தலத்திற்கு சொந்தமான கலை அரங்கம், திருமணக்கூடம் போன்றவற்றை கட்டணத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவுக்கூடமும் இத்தலத்தின் பராமரிப்பில் செயல்படுகின்றது.
*உணவுக் கூடத்தில் தென்னிந்திய உணவுப் பொருட்களான இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், வடை, சட்னி சாம்பார் காலை நேரத்திலும்;, மதிய வேளையில் தென்னிந்திய அரிசி சாப்பாடும் கிடைக்கின்றது என்பது ஒரு மகிழ்ச்சிகுரிய செய்தியாகும்.
*இங்குள்ள பரிசுப் பொருள் அங்காடியில் சுவாமி படங்கள், விக்ரகங்கள், வேதம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இத்தலத்திற்கு பாத்தியப்பட்ட ஆன்மிக பாடசாலையும் இயங்குகின்றது.*\
*இங்கு அறிவியல், கணிதம் மற்றும் இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதுடன், யோகாசனம், பிராணாயமமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சங்கீதம், பரத நாட்டியம், கதக்களி, வேதங்கள், சுலோகங்கள், நாலாயிரம் திவ்விய பிரபந்தம் போன்றவைகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
*பொதுவாக வார இறுதி நாட்களில் நடைபெறும் இந்த பாடசாலையில் 5 முதல் 17 வயது நிரம்ப பெற்றவர்கள் பயன் பெறுகின்றனர்.
*இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் வாரநாட்களில் காலை 08.00 மணி முதல் மாலை 21.00 மணி வரை, வாரக்கடைசி நாட்களில் காலை 07.30 மணி முதல் 21.00 மணி வரை திறந்திருக்கும்.*