தடுப்பூசி விவகாரம் : இவ்வளவு தான்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
கோவிட் தடுப்பூசியால் பக்க விளைவு உண்டு என்று அதனை தயாரித்த கம்பெனி இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது.
அண்மைக்காலமாக இளம் வயது மாரடைப்புகள் அதிகமாக நிகழ்ந்து வருவதற்கு தடுப்பூசியின் பக்க விளைவே காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில்தான் இந்த ஒப்புதல் வாக்குமூலம்.
தகவல் வெளியானது முதல், தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கும் அலோபதி மருத்துவ ஆதரவாளர்களுக்கும் இடையே சொற்போர் ஆரம்பமாகிவிட்டது.
அநியாயத்திற்கு நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்கள் என்று தடுப்பூசி எதிர்பாளர்கள் சொல்ல, சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு என்று வடிவேலு வானில் அலோபதி ஆதரவாளர்கள் பதில் அளிக்கிறார்கள்.
புதிதாக மருந்து என்று கண்டுபிடித்தால் சிறிய அளவிலாவது பக்க விளைவு வந்தே தீரும் என்பது அவர்களது வாதம்.
நாடு முழுவதும் ஒரு டோஸ், இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் என மொத்தம் சுமார் 175 கோடி தடுப்பூசிகள் போடப் போட்டிருக்கும் நிலையில் அங்கொன்று இங்கொன்றுமாக ரத்தம் உறைதல் ரத்தத் தட்டுகள் குறைதல் போன்றவை நிகழ்ந்தே தீரும் என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.
145 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பல கட்டங்களாய் 175 கோடி தடுப்பூசிகள் என்றால், குழந்தைகளைத் தவிர்த்து தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 60% அளவுக்கு இருக்கலாம்.
இதற்கு மேலும் புள்ளி விவரங்களை அலசப்போனோம் என்றால் அது தலையைத்தான் சுற்ற வைக்கும்.
அதனால் இனி நடக்க வேண்டிய மேட்டருக்கு வருவோம்.
பக்கவிளைவால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பயப்படத் தேவையில்லை என்று அலோபதி உலகம் கூலாக சொல்லும். பாதிக்கப்பட்டவர்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதையாவது கொடுத்து தொலைங்கடா என்று புதிதாக மருந்து மாத்திரைகள் பின்னால் ஓட ஆரம்பிப்பார்கள்.
கிராமத்து பாஷையில் சொன்னால் பாம்பு என்று அடிக்கவும் முடியாது, கயிறு என்று தோளிலும் போட்டுக் கொள்ள முடியாது..
https://patrikai.com/astrazeneca-admits-its-covid-vaccine-covishield-can-cause-rare-side-effect-causing-blood-clots-with-low-platelets/