டெல்லி

டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது..

கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது

.பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிசோடியாவை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று நீதிபதி காவேரி பாவேஜா முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவதற்கான சூழல் தற்போது சரியாக இல்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.