அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான என்ற அந்தப் பெண் பியூனஸ் அயர்ஸ் பிராந்தியத்தின் பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார்.
அழகு மற்றும் வயதுக்குமான கருத்துகளை மாற்றியமைத்துள்ள இவர் 2024 மே மாதம் நடைபெற இருக்கும் அர்ஜென்டினா நாட்டின் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள 18 முதல் 28 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் உச்ச வயது வரம்பை கடந்த ஆண்டு முதல் நீக்கம் செய்து பிரபஞ்ச அழகி போட்டி நடத்தும் அமைப்பு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து 46 வயதான ஹைடி க்ரூஸ் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பிரபஞ்ச அழகிப் போட்டியில் டொமினிக்கன் ரிபப்ளிக் குடியரசு சார்பாக கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் அழகிப் போட்டிகளில் இருந்து வந்த ஒரே மாதிரியான அனுபவங்களை மாற்றியமைக்கும் விதமாக 60 வயதான பெண் அர்ஜென்டினா நாட்டில் அழகியாக தேர்வாகியுள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.