சென்னை

கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. 

அதாவது, தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்குக் காலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும், காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்குக் காலை 4.40 மணியில் இருந்து 10.05 மணி வரையிலும் 30 நிமிட இடைவெளியில் 9 பயணிகள் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.