ஜெய்ப்பூர்

பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகத்தை சிதைப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார்.

நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி,

”கட்ந்த் 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசிடம் நாடு சிக்கி இருக்கிறது. நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதால் ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்படுகின்றன. நம்முடைய அரசியல் சாசனத்தை மாற்றுவதற்குச் சதி நடக்கிறது.

பாஜகவில் எதிர்க்கட்சித்தலைவர்களை இணைய வைக்கப் பல்வேறு தந்திரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தம்மை மாபெரும் தலைவராக கருதும் மோடிஜி, நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருவது ஒரு சர்வாதிகாரம் ஆகும். நாம் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.”

என்று தெரிவித்துள்ளார்.