புதுடில்லி
இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில் நீதித்துறை குறித்த வாக்குறுதிகள் பின்வருமாறு:-
உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கத் தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்தல்
இன்னும் மூன்று வருடங்களில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்துப் பணி இடங்களையும் நிரப்புதல்
உச்சநீதிமன்றத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சட்டப்பூர்வ நீதிமன்றம் என இரண்டாகப் பிரிக்கத் தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருதல்
நீதித்துறையின் உள்கட்டமைப்புக்குத் தேவையான நிதி ஒதுக்குதல்
உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் அதிக அளவில் பெண்களும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் நீதிபதிகளாக நியமித்தல்
நீதிபதிகளின் ஒழுங்கீனம் குறித்து விசாரிக்க நீதித்துறை புகார் ஆணையத்தை நியமித்தல்
பண இழப்பீடு வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் நலனுக்காகவும் விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல்
என்பவை ஆகும்.