சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 23நாட்கள் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 18, 19ம் தேதி மற்றும் ஜூன் 4ம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை (2 நாட்கள்) மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel