மேற்கு காமெங்
இன்று அதிகாலை 1.49 மணி அளவில் அருணாசலப் பிரதேசத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் அருணாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் பாங்கின் பகுதியில் இருந்து வடக்கே 975 கி.மீ. தொலைவில் ஏற்பட்டு 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
மீண்டும் இன்று அதிகாலை 1.49 மணியளவில்அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகி உள்ள இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்க அறிவியல் மையம் இதனைத் தெரிவித்து உள்ளது.
அடுத்த 2 மணி நேரத்திற்குள் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு காமேங் பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் 2 ஆவது நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகி இருந்த இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.