சென்னை: கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி மூளையின் ரத்த குழாயில் அடைப்பு காரணமாக மீண்டும் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் சகோதரருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி . இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து,சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தயாநிதி, சில நாட்களில் வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அதையடுத்து, துரை தயாநிதியை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில், மீண்டும் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
துரை தயாநிதிக்கு கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று துரை தயாநிதியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் அதிக அளவில் போதை மருந்து உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து,சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார் துரை தயாநிதி. இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.