பெங்களூரு

ர்நாடக முன்னால் பாஜக முதல்வர் எடியூரப்பா மீது ஒரு சிறுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது 

கர்நாடகாவின் பிரபல பாஜக பிரமுகரான எடியூரப்பா அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார்.  இவர் மீது ஒரு 17 வயதுச் சிறுமி பாலியல் புகார் அளித்ததால் போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அந்த 17 வயது சிறுமி தனது புகாரில்

கடந்த மாதம் 2 ஆம் தேதி நான் கல்வி குறித்து உதவி கேட்க எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றிருந்தேன். அபோது எனது தாயும் உடன் வந்தார்.  நான் அவருடைய இல்லத்துக்குச் சென்று கல்வி உதவி குறித்து கோரிக்கை விடுத்தேன். எடியூரப்பா என்னை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்.  அங்கு அவர் என்னிடம் பாலியல் அத்துமீறல் புரிந்தார்.’ 

என்று தெரிவித்துள்ளார்.

அந்த சிறுமி தனது புகாரை பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.