கொல்கத்தா

நெற்றி காயம் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு திரும்பி உள்ளார்.

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நெற்றியில் ரத்தம் வழிகிற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

அவருக்கு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிறகு அங்கிருந்து அவர் இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்சஸ்-இல் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. தற்போது மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.  அவர் மேலும், சில நாட்களுக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதில் மம்தா பானர்ஜிக்குத் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மம்தா விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரதமர் மோடி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.