டில்லி

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் 7 நாட்கள் என் சி பி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தார், நேற்று ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்,

:நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்த்த போதைப்பொருள் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஜாபர் சாதிக் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார் .

இவர் உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்குப் போதைப்பொருளைக் கடத்தியுள்ளார். ஜாபர் போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் திரைத்துறையில் முதலீடு செய்துள்ளார்”

என்று தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்  ஜாபர் சாதிக்கை 7 நாள் என்.சி.பி. காவலில் வைக்க டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.