பன்ஸ்வாரா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப்பணிகளை நிரப்புவோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

சுற்றுப்பயணத்தின் இடையில்  இன்று பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்

”நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.  அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதைத் தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும். 

அனைத்து விவசாயிகளும் தாங்கல் விளைவிக்கும் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற சட்டப்பூர்வமா உத்தரவாதம் அளிக்கப்படும். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.” 

என்று ராகுல் காந்தி கூறி  உள்ளார்.