ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. கூட்டணிக்கு:: தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன.

அடுத்து பீகார் முதல்வரும், இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கிய தலைவருமான நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

தற்போது இந்தியா கூட்டணி உள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமது கட்சிக்கு இந்தியா கூட்டணியுடன் தேர்தல் பங்கீடு இல்லை என் அறிவித்துள்ளார்.

பரூக் அப்துல்லா,

”மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாடு தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரு வேறு கருத்துகள் இதில் இல்லை. எனவே இனி இதைப் பற்றி எந்த கேள்வியும் இருக்கக்கூடாது’

என்று தெரிவித்துள்ளார்.