டில்லி

றைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அவர் உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

விபாகர் சாஸ்திரி செய்தியாளர்களிடம்,

“பாஜகவின் கதவுகளை எனக்காகத் திறந்ததற்காக பிரதமர் மோடி, நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய தாத்தா லால்பகதூர் சாஸ்திரியின் பார்வையை முன்னெடுத்துச் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பாஜக கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு சித்தாந்தம் இல்லை, அவர்களுக்கு மோடியை அகற்றுவதே நோக்கமாக உள்ளது. ராகுல் காந்தி காங்கிரசின் சித்தாந்தம் என்ன என்பதை ராகுல் காந்தி சொல்ல வேண்டும்”

என்று கூறியுள்ளார்.