சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இது தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையதாக நடைபெற்றுள்ளது.
இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுநர் தனது உரையை திருக்குறளை மேற்கோளிட்டு வாசிக்கத் தொடங்கினார். ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கியதுடன், அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் பாடக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். தேசிய கீதத்தை பேரவை தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன் அது ஏற்கப்படவில்லை. பேரவையில் தேசிய கீதம் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர். உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண் படுகிறேன், அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்ல என்று கூறியதுடன், வாழ்க தமிழ், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என உரையை 4 நிமிடத்திலேயே முடித்துக் கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், ஆளுநர் உரைக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு படித்தார்.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு செய்த நிலையிலும், அவையில் இருந்து வெளியேறாமல் அவையிலேயே அமர்ந்திருந்தார். இதனால் பரபரப்பு நிலவியது.