சென்னை: கலைத்துறையில் சிறந்த சேவைகள் செய்தற்காக நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு, மறைந்த முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, வைஜயந்தி மாலா, கும்மி நடன கலைஞர் கோவை பத்ரப்பன், பழம்பெரும் நாதஸ்வரக் கலைஞர் ஷேஷம்பட்டி டி சிவலிங்க உள்பட 34 பேருக்கு மத்தியஅரசு பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமான தேமுதிக தலைவரும், நடிகரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவருமான விஜயகாந்துக்கு மத்தியஅரசு சிறந்த சேவைக்கான பத்ம பூஷன் விருது அறிவித்து உள்ளது.
இதேபோல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, தேக்கம்பட்டி கிராமம், தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த திரு பத்ரப்பன் என்பவருக்கு கிராமிய கலைகளை வளர்த்தற்காக தனது தள்ளாத வயதிலும் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு.பத்தரப்பன் அவர்களை அவரது இல்லத்தில் இன்று இரவு மாண்புமிகு மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, நடிகர்கள் சிரஞ்சீவி, வைஜெயந்திமாலா பாலி, பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதாக குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி எம். பாத்திமா பீவி, மேற்கு வங்க முன்னாள் பாரதீய ஜனதா தலைவர் சத்யபிரதா முகர்ஜி, லடாக்கில் உள்ள டிரிகுங் காக்யு பாரம்பரியத்தின் ஆன்மிகத் தலைவர் டோக்டன் ரின்போச்சே. சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் ஆகியோருக்கும் மரணத்திற்குப் பின் வழங்கப்படும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
பத்ம விருதுகளின் பெருமைகள்
பத்மஸ்ரீ விருது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பாரத ரத்னா மிக உயரிய சிவிலியன் விருதாகும். அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனி மனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து மரியாதையின் படி நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது பத்ம விருதுகள்
பத்ம விருதுகள் மூன்று வகைப்படும் அவை 1. பத்மஸ்ரீ 2. பத்மபூஷன் 3. பத்ம விபூஷன் ஆகியவையாகும். பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.