சென்னை: இந்த ஆண்டு நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தேதிகள் அறிவித்தல், தேர்வு நடத்துவதற்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு இடைநிலை பள்ளிகளில் காலியாக உள்ள 15000 இடங்களை நிரப்புவது தொடர்பாக ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel