சென்னை: திறமையற்ற ஆட்சியாளர்கள் மற்றும் முறையான திட்டமிடல் இல்லாததால், வெளியூர்களுக்கு செல்ல பதிவு செய்த பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். முழுமையாக கட்டி முடிக்கும் முன் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர் மற்றும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நேற்று திடீரென அனைத்துஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து வலுக்கட்டாயகமாக வெளியறேற்றப்பட்ட நிலையில், அங்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது லக்கேஜ் உடன் கடும் அவதியடைந்தனர். பயணிகளை பேருந்து நிலையத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியதுடன் தங்களை விரட்டியடித்தனர் என்று கூறினார். திறமையற்ற திமுக அரசால் நாங்கள் அவதியடைகிறோம் என பயணிகள் குற்றம் சாட்டினர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ஜனவரி 24 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. பேருந்து நிலையத்தையும், அதில் கருணாநிதி சிலையை வைக்கவும் ஆர்வம் காட்டிய திமுகஅரசு, அங்கு வரும் பயணிகளுக்கு போதுமான வசதிகளை செய்து தருவதில் கோட்டை விட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் செல்ல முறையான பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப வசதிகள் செய்து தரப்படவில்லை. பேருந்து நிலையத்தின் முன்பகுதி மட்டும் அலங்கரிக்கப்பட்டு கருணாநிதி சிலையை வைத்துள்ள திமுக அரசு, உள்ளே இன்னும் முழுமையாக பணிகளை முடிக்காமல் அவசர கதியில் திறந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பிடிக்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது லக்கேஜ்களுடன் நடந்து வர முடியாத நிலை தொடர்கிறது. இதை சரி செய்ய முறையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் திமுக அரசு, தற்போது ஆம்னி பேருந்துகளையும் கேயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதி மறுத்து அடாவடியில் இறங்கி உள்ளது. அமைச்சர் சேகர்பாபுவும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று மிரட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கிளாம்பாக்கத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து பேருந்துகளை இயக்க முடியாது எனவும் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் என கூறினர். மேலும் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் இயக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கூறினர்.
ஆனால், அமைச்சர்களும், அதிகாரிகளும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஆம்னி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 7:30 மணி முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர்.
பேருந்து நிலையம் வந்த பயணிகளை கிளாம்பாக்கம் செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் பயணிகள் பலர் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். அதிகப்படியான லக்கேஜ் உடன் வந்த பயணிகள் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான வசதிகள் செய்து தராமல் அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்தது ஏன்? அங்கு செல்ல போதிய பேருந்துகளை இயக்காதது ஏன் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதை கண்டுகொள்ளாத திராவிட மாடல் அரசு, கிழக்கு கடற்கரைச் சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், ம் இந்த உத்தரவை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும் காவல்துறையினரை குவித்து மிரட்டல் நடவடிக்கை யிலும் ஈடுபட்டது.
இதனால், அதிகாரிகளுக்கும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பேருந்து உரிமையாளர்களும் தங்களால் திடீரென காலி செய்ய முடியாது எனப் பேருந்து உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை கூயனர்.
இதைத்தொடர்ந்து, கோயம்பேடு வந்த பயணிகளை சென்னை மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். இருந்த போதும் தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியான பொதுமக்கள் கோயம்பேடு பகுதிக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் உரிய திட்டமிடாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதாவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விளக்கம் அளித்த சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர் என்றார். ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தங்களது போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், அங்குள்ள கடைகளுக்கு வாடகை பயங்கரமாக உள்ளது என்று கூறி, தங்களால் அங்கு வர முடியாது என்று மறுப்பு தெரிவித்னர்.
இதனிடையே கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் காவல்துறை உதவியுடன் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் சலீம் ஆகியோர் கூறியதாவது:
ஆம்னி பேருந்துகளை ஜன.24 முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்ககூடாது என 2 நாட்களுக்கு முன்புதான் சுற்றறிக்கை வந்தது. 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு நடக்கிறது. 24-ம் தேதி பயணிக்க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த தொடர் விடுமுறையையொட்டி 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் கிளாம்பாக்கம் வரச் சொல்வது சாத்தியம் இல்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 50 கடைகள், 400 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. ஆனால், ஆம்னி பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் ஒரு அலுவலகம் கூட ஒதுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, அங்கு எப்படி பேருந்துகளை இயக்க முடியும். சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பேருந்துகளை அங்கு நிறுத்த சொல்வது நியாயமா. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அலுவலகம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறினார்.
திறமையற்ற திமுக அரசின் முறையான திட்டமிடல் இல்லாத காரணம் மற்றும் மக்களை ஏமாற்றும் வகையில் பொய் தகவல்கள் பரப்புதல், எதிர்க்கட்சியினரையும், குற்றங்களை சுட்டிக்காட்டும் நபர்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு மிரட்டுதல் போன்ற நடவடிக்கைகளால், தமிழ்நாடு மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.