வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் அதன் நிலை குறித்து ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேள்வி எழுப்பிய நிலையில்.
ஜெயலலிதாவிடம் இருந்து 700 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள். 7040 கிராம் எடையுள்ள வெள்ளி நகைகள், 740 விலையுயர்ந்த செருப்புகள், 11,344 பட்டுப் புடவைகள், 250 சால்வைகள், 12 குளிர்சாதன பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 VCRகள், 1 வீடியோ கேமரா, 4 சிடி பிளேயர்கள், 2 ஆடியோ டெக்குகள், 24 டூ இன் ஒன் டேப் ரெக்கார்டர்கள், 1040 வீடியோ கேஸ்கள் , 3 இரும்பு லாக்கர், ரூ. 1,93,202 ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது செப்டம்பர் 2014ல் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் நகை மற்றும் பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் அபராத தொகையை பெற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஏலம் விடப்படாமல் இருந்தது இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கான செலவு தொகை ரூ. 5 கோடியை டி.டி. மூலம் கர்நாடக அரசு கருவூலத்திற்கு தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.