சேலம்

ன்று சேலத்துக்கு வந்துள்ள தமிழக ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் aaLuwar கலந்துரையாட உள்ளார் .ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பெரியார் பல்கலைக்கழகம் முன்பு சேலம் மாநகர காவல்துறை சார்பில் 400 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.