திருச்சூர்
பினராயி விஜயனைக் களங்கம் நிறைந்த முதல்வர் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில மாநாடு நடந்துள்ளது மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்
அப்போது அவர்,
”கேரள மாநில அர்சு ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி மாணவிகளின் தலையை ஹெல்மெட் கொண்டு அடித்து உடைக்கும் நபர்களுக்கு சு விருது வழங்கி உலக சரித்திரத்தில் இல்லாத சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. எனவே பினராயி விஜயன், மாநிலத்தின் களங்கம் நிறைந்த முதல்வராக விளங்குகிறார். கேரள மக்களுக்கு இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நாட்டின் பாதுகாப்பு குறித்து வாய் கிழியப் பேசி விட்டு நாடாளுமன்றத்தைக் கூட காப்பாற்ற இயலாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தட்டி கேட்டு குறைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த சரித்திரம் பா.ஜனதாவுக்கு உள்ளது.
தற்போது நாட்டில் வேலையின்மையால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி என்ற பெயரை மோடி எளிதாகப் பெற்று விட்டார். பாஜக நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் மதம் சார்ந்த விஷயங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி தேர்தலைச் சந்திக்கிறது.”
என்று கூறி உள்ளார்.