சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்றுடன் 155வது நாளாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் 2024 ஜனவரி 4 வரை  நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால்  ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் காவல் 13வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவுடன் நெஞ்சுவலி என கூறி தனியார் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு சிகிச்சை பெற்ற அவர் சுமார்,  55 நாட்களுக்கு பிறகுதான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவரது அமைச்சர் பதவியை இன்னும் தமிழ்நாடு அரசு பறிக்காமல் விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், அவரது சிறைவாசம் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இன்றுடன் அவரது சிறைவாசம் 155வது நாளை எட்டியுள்ளது. இன்றுடன் அவரது சிறைவாசம் 155வது நாளை எட்டியுள்ளது.   சிறையில் உள்ள ஒரு கைதிக்கு,  அமைச்சருக்கு உரிய மரியாதையை வழங்கி வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஜூன் 14ந்தேதி இரவு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 15ந்தேதி முதல் 30ந்தேதி வரை 16 நாட்களும், ஜூலை மாதம் 31 நாட்களும், ஆகஸ்டு மாதம் 31 நாட்களும்,  செப்டம்பர் மாதம் 30 நாட்களும்,  நவம்பர் மாதம் 31 நாட்களும், டிசம்பர் மாதம் இன்றுவரை 16 நாட்களும் என இன்று 155வது நாளாக சிறையில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இந்திய வரலாற்றிலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவர் 5 மாதங்களை கடந்து அமைச்சராக பதவியில் நீட்டிப்பது தமிழ்நாட்டில்தான் என்பது மாபெரும் அரசியல் பிழையாக கருதப்படுகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் ஜூன் 14-ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டுவ ருகிறது.  தற்போது  13-வது முறையாக அவரது சிறைக்காவலை  நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், அவருக்கு எதிராகக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.  இந்த நிலையில், அவரது காவல்நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி  ஆஜார்படுத்தபட்டார். இதனையடுத்து  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார்.. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.